கோலாலம்பூர்: 26.02.2024
7,500 அந்நியத் தொழிலாளர்களுக்கான பிரதமரின் வாக்குறுதி என்னவானது என்று மலேசிய இந்தியர் பொற்கொல்லர் சங்கத்தின் தலைவர் டத்தோ ஹாஜி அப்துல் ரசூல் கேள்வி எழுப்பினார்.
நாட்டில் இந்திய பாரம்பரிய தொழில் துறைகளுக்கு 7,500 அந்நியத் தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று கடந்தாண்டு பிரிக்பீல்ட்ஸில் நடைபெற்ற நிகழ்வில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த வாக்குறுதி அளித்தார்.
அப்போது மனிதவள அமைச்சராக இருந்த வி. சிவகுமார் எங்களுக்கு அந்நியத் தொழிலாளர்கள் கிடைப்பதற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்வதாக கூறி இருந்தார். அதற்கான பணிகளையும் அவர் முடுக்கிவிட்டிருந்தார்.
ஆனால் மனிதவள அமைச்சர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டதும் எங்களின் கனவு எல்லாம் கலைந்து போனது.
இப்போது அந்நியத் தொழிலாளர்கள் கிடைக்காததால் நாங்கள் எல்லாம் பரிதவிக்கிறோம்.
எங்களுக்கு உதவி செய்யப் போவது யார்? பிரதமரின் வாக்குறுதி என்னவானது?
இந்த இந்த வாக்குறுதி தொடர்பில் நாங்கள் யாரை சென்று பார்ப்பது?
இப்போதைய மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வாரா?
அல்லது புதியதாக பதவிக்கு வந்துள்ள மாட்சிமை தங்கிய மாமன்னரை நாங்கள் சந்திப்பதா என்று அடுக்கடுக்கான கேள்விகளை டத்தோ ஹாஜி அப்துல் ரசூல் முன் வைத்தார்.
Comments