கோலாலம்பூர்:

உலக தங்க வணிகர்கள் மாநாட்டின் வாயிலாக நாட்டின் தங்க வணிகம் மேலும் ஒருபடி மேல் சென்று விரிவாக்கம் காண்கிறது என்று மலேசிய இந்தியர் நகை வணிகர், பொற்கொல்லர் சங்கத்தின் தலைவர் டத்தோ ஹாஜி அப்துல் ரசூல் கூறினார்.

இதற்கு முன்னர் உலக தங்க வணிகர்கள் மாநாட்டை அரபு நாடுகள் மட்டுமே நடத்தி வந்துள்ளன.

இம்முறை உலக தங்க வணிகர்கள் மாநாட்டை ஏற்று நடத்தும் வாய்ப்பு மலேசியாவுக்கு கிடைத்துள்ளது.

தென்கிழக்கு ஆசியாவில் இந்த மாநாடு நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.

கிட்டத்தட்ட 50 நாடுகளில் இருந்து பேராளர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.

இம்மாநாடு மலேசியாவுக்கு மிகப் பெரிய பெருமைச் சேர்த்துள்ளது. குறிப்பாக உலக ரீதியிலான தங்க வணிகர் இங்கு ஒன்றுக் கூடி உள்ளனர். 

இந்த வணிகத்தின் அடுத்த திட்டங்கள், சவால்கள், முதலீடுகள் உட்பட பல விவகாரங்கள் குறித்து இங்கு விவாதிக்கப்படுகிறது.

May be an image of 6 people and text

இம்மாநாடு மலேசிய தங்க நகை வணிகர்களுக்கு பெரும் பயனாக அமைந்துள்ளது. குறிப்பாக மலேசிய தங்க வணிகம் இம்மாநாட்டின் வாயிலாக விரிவாக்கம் கண்டு அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது என்று டத்தோ அப்துல் ரசூல் கூறினார்.

தங்க நகை வணிகத்தின் மேம்பாட்டிற்காக நாங்கள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால் எங்களின் அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு மட்டும் இதுநாள் வரை அரசாங்கத்திடமிருந்து நிரந்தர தீர்வு காணப்படவில்லை.

ஆகவே எங்களின் பிரச்சினைக்கு அரசாங்கம் உரிய தீர்வு காண வேண்டும் என்று டத்தோ அப்துல் ரசூல் வேண்டுகோள் விடுத்தார்.