கோலாலம்பூர்:
நாட்டில் அந்நியத் தொழிலாளர்களுக்கு தடை விதிக்கப்படலாம் என பரவலாக கூறப்படுகிறது.
அப்படி தடை விதிக்கப்பட்டால் 3 இந்திய பாரம்பரிய தொழில் துறைகளில் நிலை என்னவென்று மலேசிய இந்தியர் பொற்கொல்லர் நகை வணிகர்கள் சங்கத்தின் தலைவர் டத்தோ அப்துல் ரசூல் கேள்வி எழுப்பினார்.
கடந்தாண்டு நகைக்கடைகள், ஜவுளி, முடித் திருத்துவது ஆகிய 3 தொழில் துறைகளுக்கு 7,500 அந்நிய தொழிலாளர்களை பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.
ஆனால், இதுநாள்வரை 200க்கும் அதிகமான தொழிலாளர்கள் மட்டும் இத்திட்டத்தின் வாயிலாக நாட்டிற்குள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு இத் தொழிலாளர்களுக்கான கடினமான விதிமுறைகள் இதற்கு காரணமாக உள்ளது.
இந்நிலையில் வரும் மார்ச் 31ஆம் தேதியோடு அந்நியத் தொழிலாளர்களுக்கு தடை விதிக்கலாம் என கூறப்படுகிறது.
அத் தடை அமலுக்கு வந்தால் அந்நிய தொழிலாளர்களை நம்பியிருக்கும் இந்த 3 தொழில் துறைகளில் நிலைமை கேள்விக் குறியாகி விடும்.
ஆகவே உள்துறை அமைச்சும் மனிதவள அமைச்சும் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
Comments