கோலாலம்பூர் பிப் 28-
உலக தங்க வணிகர்கள் மாநாடு இன்று கோலாலம்பூர் புக்கிட் பிந்தாங் JW Marriott தங்கும் விடுதியில் விமரிசையாக தொடங்கியது.
உலக தங்க வணிகர்கள் மாநாடு மூலம் நாட்டின் தங்க வணிகம் மேலும் ஒருபடி மேல் சென்று விரிவாக்கம் காண்கிறது என்று மலேசிய இந்தியர் நகை வணிகர், பொற்கொல்லர் சங்கத்தின் தலைவர் டத்தோ ஹாஜி அப்துல் ரசூல் கூறினார்.
இதற்கு முன்னர் உலக தங்க வணிகர்கள் மாநாட்டை அரபு நாடுகள் மட்டுமே நடத்தி வந்துள்ளன.இம்முறை உலக தங்க வணிகர்கள் மாநாட்டை ஏற்று நடத்தும் வாய்ப்பு மலேசியாவுக்கு கிடைத்துள்ளது.
கிட்டத்தட்ட 50 நாடுகளில் இருந்து பேராளர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.இம்மாநாடு மலேசிய தங்க நகை வணிகர்களுக்கு பெரும் பயனாக அமைந்துள்ளது.
மலேசிய தங்க வணிகம் இம்மாநாட்டின் வாயிலாக விரிவாக்கம் கண்டு அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது என்று டத்தோ அப்துல் ரசூல் பெருமையுடன் குறிப்பிட்டார்.
Comments